பிரித்தானியாவில் இரு பெரும் நிறுவனங்களை சொந்தமாக்கிய இலங்கை அமைச்சர்!
15 Dec,2023
.
பிரித்தானிய தலைநகர் லண்டனில் வர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு நிறுவனங்களுக்குச் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் சொந்தக்காரர் என்பதை புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் சர்வதேசக் கூட்டமைப்பான பண்டோரா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ளது.
.
மேலும், 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் அரசியல்வாதிகள், பிரபலங்கள், வணிகர்கள் மற்றும் குற்றவாளிகளின் நிதி ஒப்பந்தங்கள் மற்றும் மறைக்கப்பட்ட சொத்துக்களை அம்பலப்படுத்தும் வகையில் பண்டோரா ஆவணம் பல விடயங்களை வெளியிட்டு வருகின்றது.
.
இதன்படி லண்டனில் 2006 இல் ப்ரொம்ப்டன் ப்ரொப்பர்டீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை சுமார் 960,000 டொலருக்கு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் வாங்கினார், இதேவேளை, 2008 ஆம் ஆண்டு பான்ஹாம் வென்ச்சர்ஸ் லிமிடெட் என்ற இரண்டாவது நிறுவனத்தை வாங்கியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.
இவ்வாறு கசிந்த ஆவணங்களில் உள்ள ஒரு அறிவிப்பின்படி, பி.வி.ஐ நிறுவனங்களுக்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்பட்ட நிதி, ஒரு தொழிலதிபராக டிரன் அலஸ்ஸிடம் இருந்து வந்ததை காட்டுகின்றது.