சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமான சேவை
07 Dec,2023
.
சவுதி அரேபிய ஏர்லைன்ஸ், சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமானங்களை சேவையில் ஈடுபடுத்தும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற வெளியுறவுத்துறை அமைச்சகம் மீதான குழுநிலை விவாதத்தின் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
.
மேலும் அவர் தெரிவிக்கையில், விமானங்களை விரைவில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபிய பொருளாதார விவகார அமைச்சர் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
.
பல்வேறு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான கலந்துரையாடலின் பின்னரே, விமானங்களை இயக்காத விமான நிறுவனங்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சினால் முடிந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
.
எயார் சீனா, மலிண்டோ ஏர்வேஸ், தாய் ஏர் ஏசியா, விஸ்தாரா, ஏர் அஸ்தானா, ஸ்பைஸ்ஜெட், ஏர் சீசெல்ஸ் மற்றும் ஏர் அரேபியா ஆகிய விமானங்களின் சேவைகளை இலங்கைக்கு கொண்டு வர முடிந்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.