இலங்கைக்கு கிடைக்கவுள்ள 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
02 Dec,2023
.
அடுத்த வாரத்திற்குள் இலங்கைக்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்களும், உலக வங்கியின் உதவியாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்களும், ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர்களும் பெறப்பட உள்ளன.
சர்வதேச நாணய நிதியம் தொடர்பாக, கடனாளர் மறுசீரமைப்பு பாரிஸ் கிளப் மற்றும் சீனாவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
.
அத்துடன் இந்தியா முன்பு அதன் ஒப்புதலை வழங்கியிருந்தன. அதற்கமைய, 5.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொகை மறுசீரமைக்கப்படும்.
.
கடனாளர் மறுசீரமைப்பின் ஒப்புதலின் காரணமாக சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு டிசம்பர் 14 ஆம் திகதி கூடவுள்ளது. இதன் போது இரண்டாம் தவணை கடன் வழங்குவது தொடர்பாக விவாதத்திற்கு தயாராகி வருகிறது.
.
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் பெற்றுக்கொள்ளப்படும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
.
டொலரின் விலை 250 - 300 ரூபாவிற்குள் எட்டப்படும் எனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் உதவி கிடைத்த பின்னர் பொருட்களின் விலை சற்று குறையலாம் எனவும் நிதி அமைச்சு கணித்துள்ளது.