இலங்கையில் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையை நிறுவும் சீன நிறுவனம்!
29 Nov,2023
சீன எரிசக்தி நிறுவனத்தின் புதிய பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை இலங்கையில் அமைக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சுமார் ரூ.37 ஆயிரம் கோடி மதிப்பில் சீனாவின் சினோபெக் எரிசக்தி நிறுவனத்தின் புதிய பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலையை இலங்கையின் ஹம்பன்தோடா துறைமுகத்தில் அமைக்க இலங்கை அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என அமைச்சர் காஞ்சனா விஜே சேகரா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்றின் மிகப்பெரிய நேரடி முதலீடு இதுவாகும். இந்த சுத்திகரிப்பு ஆலையுடன் சேர்த்து அதனுடன் தொடர்புடைய தயாரிப்பு மற்றும் பயிற்சி மையங்களும் இலங்கையில் கூடுதலாக அமைக்கப்பட உள்ளது.
2010ம் ஆண்டு திறக்கப்பட்ட ஹம்பன்தோடா துறைமுகம் இலங்கையின் 2வது மிகப்பெரிய துறைமுகம் ஆகும்.
2017 ம் ஆண்டு முதல் இவை சீன வர்த்தக துறைமுகங்களின் கூட்டு முயற்சியில் கீழ் இயக்கப்பட்டு வருகிறது.
சீனாவின் எக்ஸிம் வங்கி இந்த துறைமுகத்தின் கட்டுமானத்திற்கு கடன் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.