பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,251 கோடி நிதியுதவி
10 Nov,2023
.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ள இலங்கைக்கு உலக வங்கி 1,251 கோடி நிதியுதவி அளிப்பதாக தெரிவித்துள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்ரம சிங்கே பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடமும், இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளிடமும் நிதியுதவி கோரினார். இந்நிலையில் இலங்கைக்கு
ரூ.1,251 கோடி நிதியுதவி அளிக்க உலக வங்கி அனுமதி வழங்கி உள்ளது. இதுகுறித்து உலக வங்கியின் பணிப்பாளர் ஃபாரிஸ் ஹடாட் சர்வோஸ் கூறியதாவது, இலங்கை நிதி நெருக்கடியை சமாளிக்க ரூ.1,251 கோடி நிதியுதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் வழங்குகிறது” என்று தெரிவித்தார்.