இந்தியாவிற்கு அடுத்த சிக்கல் : இலங்கை வரத் தயாராகும் மற்றுமொரு சீனக் கப்பல்
06 Nov,2023
.
கடந்த வாரம் ஷி யான் 6 என்ற சீனக்கப்பல் இலங்கையை வந்தடைந்த நிலையில் சீனா மற்றுமொரு ஆராய்ச்சி கப்பலை இலங்கைக்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் குறித்த கப்பல் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதற்கான அனுமதியை கோரியுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் இதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
.ல்
இந்த நிலையில், இந்த கப்பல் விஜயம் குறித்து தமக்கு தெரியாது என வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கபில பொன்சேகா கூறியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
.
சீனா ஏற்கனவே கடந்த 14 மாதங்களில் இரண்டு ஆராய்ச்சிக் கப்பல்களை அனுப்பிய நிலையில் இந்தியா கரிசனை வெளியிட்ட போதிலும், இந்த கப்பல்கள் இந்தியப் பெருங்கடலில் உளவு பார்ப்பதற்கு வருவதாக கூறிவருகிறது.
நாட்டின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (NARA) இணைந்து "புவி இயற்பியல் அறிவியல் ஆராய்ச்சி" மேற்கோள் காட்டி சீன ஆராய்ச்சிக் கப்பல் ஷி யான் 6 கடந்த வாரம் இலங்கையை வந்தடைந்தது.
.
இந்தியா கரிசனை
இந்த நடவடிக்கையானது, இந்தியப் பெருங்கடலில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதைப் பற்றிய அண்டை நாடான இந்தியாவின் கவலையை அதிகரிக்க செய்தது.
.
அதேவேளை, கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் சீன கடற்படை கப்பல் யுவான் வாங் 5 தென் இலங்கையில் உள்ள அம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.