இந்தியாவுக்கு அதிர்ச்சி. சீனாவின் ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி வழங்கியது இலங்கை!
10 Oct,2023
சீனாவின் ஆய்வுக் கப்பல் இலங்கை வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
புவி இயற்பியல், அறிவியல் ஆய்வுக் கப்பலான சீனாவின் ‘ஷி யான் 6’ என்ற சீனக் கப்பல் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள இலங்கை வருவதற்கு அனுமதி கோரியது. பாதுகாப்பு காரணங்களுக்காக இதற்கு இந்தியா சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ‘ஷி யான் 6’ கப்பலுடன் இணைந்து மேற்கொள்ளப்படவிருந்த ஆய்வுத் திட்டத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக இலங்கையின் ருஹுணு பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிவித்தது. இலங்கை கப்பல் வர அனுமதி வழங்கப்படவில்லை என இலங்கை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நவம்பர் மாதம் இலங்கைக்கு வருவதற்கு சீன கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.