ஆசாத் மௌலானா ஏன் எப்படி ஐரோப்பாவிற்கு தப்பிச்சென்றார்?

05 Oct,2023
 

 
 
இந்த கட்டுரையின் முதல் பகுதியில் தெரிவிக்கப்பட்டது போல முகமட் ஹன்சீர் என அழைக்கப்படும் ஆசாத்மௌலானா பிள்ளையானின் தவிர்க்க முடியாத சகாவாக மாறியிருந்தார்.
 
அவர் பிள்ளையானின் அந்தரங்க செயலாளரும் தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பேச்சாளருமாக காணப்பட்டார்.
 
 
 
மூன்றுமொழிகளிலும் திறமை உள்ளவராக காணப்பட்டதால் ஆசாத் மௌலானா ஒருமொழி மாத்திரம் தெரிந்த பிள்ளையான் சில முக்கிய நபர்களை அரசியல்தலைவர்களை அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்பு மற்றும் புலனாய்வு பிரிவினர்களை  சந்திக்கும்போது அவருக்கு மொழிபெயர்ப்பாளராக விளங்கினார்.
 
பிள்ளையான் முஸ்லீம் ஹன்சீரை தனது தமிழ் சகாக்களை விட அதிகம் நம்பினார்.இது சிலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
 
தமிழ் மக்கள் கட்சிக்கு இலங்கை புலனாய்வு பிரிவினர் மாதாந்தம் 35 இலட்சம் பணம் வழங்கிய நிலையில் கட்சியின் சார்பில் மௌலானவே அதனை பெற்றுக்கொண்டார்.
 
தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பெருமளவு  பணம் சிலநேரம் மௌலானாவின் தனிப்பட்ட வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டது.
 
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் படுகொலை தொடர்பில் பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறைவாசம் அனுபவித்தவேளை நீதிமன்ற அனுமதியுடன் ஒவ்வொரு சனிக்கிழமையும் பிள்ளையானை சென்றுபார்வையிட்டார்.
 
கட்சிக்குள் என்ன நடக்கின்றது என்பதை அவர் பிள்ளையானிற்கு தெரிவித்தார் பிள்ளையான் கட்சியின் உறுப்பினர்களிற்கு என்ன தெரிவிக்கவிரும்புகின்றார் என்பதையும் அவரே கட்சி உறுப்பினர்களிற்கு தெரிவிப்பார்.
 
பிள்ளையானின் வழக்கு தொடர்பானவிவகாரங்களையும் மௌhலானவே கையாண்டார்.
 
ஹன்சீர் பாணந்துறையை சேர்ந்த பாத்திமாவை மணம்முடித்தார் - அவருக்கு ஆயிசா என்ற மகளும் முபாராக் என்ற மகனும் உள்ளனர் இஅவர்களின் குடும்பத்தினர் தெகிவளை எபனேசர் பிளேசில் வசித்து வந்தனர்.
 
பிள்ளையானின்  சகா என்பதற்கு அப்பால் ஆசாத்மௌலானா  பல வர்த்தகங்களில் முதலீடு செய்திருந்தார்.மௌலானாவின் மாதந்த வருமானம் மிகப்பெரியதாக காணப்பட்டது.
 
2019 உயிர்த்தஞாயிறு தாக்குதல் இடம்பெறும்வரை ஆசாத்மௌலானாவிற்கு அனைத்தும் சிறப்பாக இடம்பெற்றதுஇதேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற ஈவிரக்கமற்ற தாக்குதலிற்கு ஜஹ்ரானும்  தேசிய தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களும்  காரணம் என அறிந்தவுடன் மௌலானா மனம் வருந்தினார்.
 
ஹன்சீர் சனல் 4 ஆவணப்படத்தில்தெரிவிப்பது போல அவரே சுரேஸ்சாலேக்கும் ஜஹ்ரான் ஹாசிமிற்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
 
தாக்குதல் இடம்பெற்ற அன்று சுரேஸ்சாலே தன்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு தாஜ்சமுத்திராவிற்கு சென்று ஒருவரை அழைத்துச்செல்லுமாறு கேட்டதாகவும் தான் மட்டக்களப்பில் இருந்ததால் அதனை செய்யமுடியவில்லை எனவும் ஹன்சீர் தெரிவித்துள்ளார்.
 
பின்னரே அந்த தாஜ்சமுத்திரா நபரே தெகிவளை ஹோட்டலில் குண்டை வெடிக்கவைத்தவர் என்பது தெரியவந்துள்ளது.
 
குண்டுவெடிப்பின் பின்னர் பிள்ளையானை சிறையில் சந்தித்தவேளை இந்த விடயம் குறித்து எதனையும் கதைக்கவேண்டாம் அமைதியாக இருக்குமாறு பிள்ளையாள் ஹன்சீரை கேட்டுக்கொண்டுள்ளார்.
 
2019 நவம்பரில் குண்டுவெடிப்பின் பின்னர் நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு வலுவான நபர் தேவை என வாக்காளர்கள் கருதியதை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.
 
சந்தேகத்திற்குரிய தொடர்புகள் 
 
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு பின்னர் அரசியல்வட்டாரங்களில்  தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும் தேசிய தவ்ஹீத் ஜமாத்- இலங்கை புலனாய்வுபிரிவின் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்த சந்தேகங்கள் காணப்பட்டன. 
 
இலங்கை அதிகாரிகளுக்கும் குண்டுவெடிப்பை மேற்கொண்டவர்களிற்கும் இடையிலான தொடர்புகுறித்து பிரபலமான கொசிப்கள் காணப்பட்டன.இந்த தாக்குதல் கோட்டாபயவை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக சதி என்ற வதந்தி காணப்பட்டது.
 
இலங்கையில் இவ்வாறான வதந்திகள் வழமையான விடயம்.
 
2021 மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது ஜேவிபி தலைவர் அனுரகுமாரதிசநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின்  நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரவும் உயிர்த்தஞாயிறு தாக்குதலில் புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகள் தொடர்புபட்டிருப்பது குறித்து பல குற்றச்சாட்டுகளை தகவல்களை வெளியிட்டனர்.
 
2021 ஏப்பிரலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணாண்டோ 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரியொருவர் தொடர்புபட்டுள்ளார் என பரபரப்பு தகவல்களை வெளியிட்டார்.
 
ஹரீன்பெர்ணாண்டோ பெயர்களை வெளியிடாமல் எச்சரிக்கையாகயிருந்தார் ,எனினும் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலேயையே அவர் குறிப்பிட்டார் என்ற கருத்து காணப்பட்டது.
 
முதலில் சுரேஸ்சாலே இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றியிருந்தார்.2015 இல் சிறிசேன ரணில்விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்த பின்னர் அவர் மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு நியமிக்கப்பட்டார்2019இல் பாதுகாப்பு கற்கைக்காக சுரேஸ்சாலே புதுடில்லி சென்றார் -  உயிர்த்தஞாயிறு தாக்குதலின் போது அவர் அங்கேயே இருந்தார்.
 
ஒக்டோபர் 2021 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச நிகழ்வொன்று சூமில் இடம்பெற்றவேளை கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் காமினி சிறிலும் அந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.இந்த கலந்துரையாடலில்  சுரேஸ் சாலே குறித்த குற்றச்சாட்டுகள் தகவல்கள் வெளியாகியிருந்தன.இதனை தொடர்ந்து சுரேஸ்சாலே தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்திவிட்டார் என தெரிவித்து அருட்தந்தை காமினிசிறிலுக்கு எதிராக மானநஸ்ட வழக்கை தாக்கல் செய்தார்.
 
அந்த வெப்பினாருக்கு பின்னர் சுரேஸ்சாலே ஹன்சீர் அசாத் மௌலானவினை தொலைபேசியில் தொடர்புகொண்டு தன்னை சந்திக்க வருமாறு அழைத்தார்.இந்த சந்திப்பில் நாடாளுமன்றத்தில் ஹரீன்பெர்ணான்டோ மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றும் வீடியோ காட்சிகளை காண்பித்த சுரேஸ்சாலே வெப்பினார்நிகழ்வில் கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் காமினி சிறில் ஆகியோர் ஆற்றிய உரையின் வீடியோக்களையும் காண்பித்தார்.
 
ஜஹ்ரானிற்கும் தேசியதவ்ஹீத் ஜமாத்தின் ஏனைய உறுப்பினர்களிற்கும் இடையில் நடைபெற்ற இந்த சந்திப்பு குறித்து எனக்கும் உனக்கும் பிள்ளையானிற்கும் மாத்திரம் தெரியும் நீ இதனை ஏனையவர்களிற்கு தெரிவித்தாயா எனக்கும் குண்டுதாக்குதலை மேற்கொண்டவர்களுக்கும் தொடர்பு என நாடாளுமன்ற உறுப்பினர்களும் கத்தோலிக்க திருச்சபையும் ஏன் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர் என  எஸ்ஐஎஸ் இயக்குநர்  ஹன்சீர் மௌலானவிடம் கேள்விஎழுப்பியுள்ளார்.
 
எனினும் புத்தளம் சந்திப்பு குறித்து எதனையும் வெளியில் தெரிவிக்கவில்லை என ஹன்சீர் மௌலானா மறுத்துள்ளார்.அதன் பின்னர் சாலே ஹன்சீர் மௌலானாவின்  தொலைபேசியை சோதனையிட்டுள்ளார்மூன்று மணித்தியால வாய்மூல விசாரணையின் பின்னர் சுரேஸ் சாலே செல்வதற்கு அவர் அனுமதித்துள்ளார்.
 
இந்த சம்பவத்தினால் ஆசாத் மௌலானா கடும் குழப்பமடைந்தார் மன உளைச்சலிற்குள்ளானார்.சுரேஸ் சாலி அவ்வளவு தூரம் சீற்றமடைந்து கடுமையானவராக காணப்படுவதை அவர் ஒருபோதும் பார்த்ததில்லை.
 
ஹன்சீர் பிள்ளையானை தொலைபேசியில் தொடர்புகொண்டு  நடந்ததை  தெரிவித்துள்ளார்அதற்கு பிள்ளையான் பயப்படவேண்டாம் நான் அடுத்த நாள் கொழும்பிற்கு  வருவேன் என தெரிவித்துள்ளார்.
 
சொன்னடிபடி பிள்ளையான் மறுநாள் கொழும்பிற்கு வந்தார்.
 
சுரேஸ்சாலேயை சந்திப்பதற்காக வழமையாக பிள்ளையான் ஹன்சீர் மௌலானவுடன் செல்வார் ஆனால் அன்று தனியாகவே சென்று சந்தித்தார்.
 
இந்த சந்திப்பு குறித்து பிள்ளையானின் சாரதி அமலனின் மூலம் ஹன்சீர் அறிந்துகொண்டுள்ளார்.
 
ஜஹ்ரான் சந்திப்பு குறித்துஹன்சீர் தகவல்களை கசிய விட்டுள்ளார் என சுரேஸ்சாலே சந்தேகிக்கின்றார் என  பிள்ளையான் பின்னர் ஹன்சீரிடம் தெரிவித்துள்ளார்.
 
இது இடம்பெற்று சில வாரங்களின் பின்னர் பிள்ளையான் ஹன்சீர் ஆசாத் மௌலானவை மட்டக்களப்பிற்கு சந்திப்பிற்காக வரும்படி அழைத்துள்ளார் தான் அங்கு செல்வதற்கு முன்னர்  தனக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் புலனாய்வு பிரிவை சேர்ந்த  முஸ்லீம் நண்பர் ஒருவர் அழைத்ததாகவும் மட்டக்களப்பில் போலியான சம்பவம் மூலம் தன்னை கொல்ல சதி இடம்பெறுவதாக  அவர் தெரிவித்தார் எனவும் ஹன்சீர் ஆசாத் மௌலானார் தெரிவித்துள்ளார்.
 
தொலைபேசியில் அழைத்தவர் ஆசாத் மௌலானவை மட்டக்களப்பு செல்லவேண்டாம் எனகேட்டுள்ளார்.
 
தான் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் மட்டக்களப்பு வரமுடியாத நிலையில் உள்ளதாக  பிள்ளையானிடம் ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
 
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி அல்லது இராணுவபுலனாய்வாளர்களினால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என அஞ்சிய ஆசாத் மௌலானா இலங்கையிலிருந்து தப்பிச்செல்ல திட்டமிட்டார்,இலங்கையிலிருந்து புறப்படுவது தாமதமானால்  தனது உயிருக்கு ஆபத்து என்பதை அவர் உணர்ந்தார்,இதன் காரணமாக அவர் முதலில் இந்தியாவிற்கு சென்றார்.
 
முகமட் ஹன்சீர் ஐரோப்பா சென்று அங்கு புகலிடம் கோரினார் ஜெனீவாவை தளமாக கொண்ட சர்வதேச மனித உரிமை அமைப்பும் ஐரோப்பாவில் உள்ள இலங்கை பத்திரிகையாளர் - மனித உரிமை ஆர்வலர் ஒருவரும் அங்கு தலைமறைவாகியுள்ள  இலங்கையின் முன்னாள் அரசஅதிகாரியும் ஆசாத் மௌலான ஐரோப்பாவிற்கு செல்வதற்கு உதவினார்கள.
 
பாக்கிஸ்தானில் உள்ள  இலங்கை மருத்துவர் ஒருவரும் இவருக்கு உதவினார்.



Share this:

Danmark to colombo

india

india

india

danmark

india

india

இன்றைய விளம்பரம் SRI LANKA

இன்றைய விளம்பரம் INDIA

இன்றைய விளம்பரம் டென்மார்க்

v

.

india

Tamilnews.cc-facebook

HOLY LAND //2019-20

HolylandTour Package 2019/20 cont/ 0091 9884849794

NAER CAR RENTAL SERVICES

Andaman Package

side

Temple Tours

Forex 9884849794

marana arvithal

© tamilnews.cc. All right reserved
mus escort bayan
ordu escort bayan
siirt escort bayan
tunceli escort bayan
bayburt escort bayan
sirnak escort bayan
ardahan escort bayan
igdir escort bayan
kilis escort bayan
osmaniye escort bayan
van escort
balikesir escort
kibris escort
escort
antalya escort
antalya escort
antalya escort
bursa escort
konya escort
afyon escort
Design and development by: Gatedon Technologies