தியாக திலீபனின் ஊர்திபவனி மீது தாக்குதல் : சிங்கள மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பு குரல்
18 Sep,2023
தமிழர் தலைநகரில் தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி தாக்கப்பட்டதற்கு காலிமுகத்திடல் போராட்டகளத்தில் முக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்த லஹிரு வீரசேகர தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
காவல்துறையினரின் அசமந்தம்
திருகோணமலையில் திலீபன் ஊர்திப்பவனி சென்றவேளை ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியவேளை காவல்துறையினர் அசமந்தமாக நடந்தவிதம் அப்பட்டமாக தெளிவாக தெரிகிறது.
ஊர்திப்பவனியை மட்டுமன்றி அதனுடன் சேர்ந்து வந்தவர்கள் மீதும் தலைக்கவசத்தால் தாக்குகின்றார்கள்.ஆனால் தாக்குதல் சம்பவம் தொடர்பில் எவரும் முறையிடவில்லை என காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல்
1983 இடம்பெற்ற கறுப்பு ஜூலை தாக்குதலை மக்களை கொல்லும் வகையில் அரசாங்கம் காத்திருந்தது.தமிழர் என்பதாலேயே தனி பிரச்சனை. இதனை புலிகள் என்று சொல்லாதீர்கள்.
திலீபன் ஒரு மாவீரன்
அத்துடன் காலிமுகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தின் மீதும் சிங்கள பௌத்த குண்டர்களே தாக்குதலை நடத்தினர்.
எனவே அந்த மக்களுக்கு திலீபன் ஒரு மாவீரன். உலகம் என்ன சொன்னாலும் தடியால் அடிபட்டு ஒரு மனிதன் இறந்தால் அதுதான் உண்மையாகும்.இந்த உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் தமக்கு தாமே குழி வெட்டி கொள்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.