யுவதிக்கு இயமனாக மாறிய கையடக்க தொலைபேசி!
22 Aug,2023
கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டே புகையிரத வீதியில் பயணித்த யுவதி ஒருவர் நேற்று மாலை 4.30 மணியளவில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக திம்புள்ள- பத்தனை காவற்துறையினர் தெரிவித்தனர்.
ஹற்றன் குடாகம பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஜெகநாதன் மேகா என்ற வயதுடைய யுவதியே புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
ஹற்றனிலிருந்து கொட்டகலை நோக்கிப் பயணித்த யுவதி புகையிரதப் பாதையில் கையடக்கத் தொலைபேசியில் பேசிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையிலான 60 அடி பாலத்திற்கு அருகில் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற 1008 ஆம் இலக்க புயைிரதத்தில் மோதி யுவதி உயிரிழந்துள்ளார்
புகையிரதத்தில் உயிரிழந்த யுவதியின் சடலத்தை புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் புகையிரதத்தில் ஏற்றி மீண்டும் கொட்டகலை நிலையத்திற்கு ரயில் செலுத்தப்பட்டு சடலம் அந்த நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
உயிரிழந்த யுவதியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் திம்புள்ள- பத்தனை காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.