ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச்செல்ல முயன்ற ஐந்து இலங்கையர்கள் அதிரடியாக கைது
01 Aug,2023
.
போலி கடவுச்சீட்டு மற்றும் விமான டிக்கெட்டுகளை பயன்படுத்தி ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற 05 இலங்கை இளைஞர்கள் நேற்று (31) காலை கட்டுநாயக்க விமான நிலைய புறப்படும் முனையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் புத்தளத்தை சேர்ந்த 24 வயதுடையவர் எனவும், விமான நிலைய அனுமதிகள் அனைத்தையும் முடித்துக் கொண்டு இன்று அதிகாலை 04.55க்கு கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் கத்தாரின் தோஹா சென்று அங்கிருந்து ஆஸ்திரியா செல்ல கடைசி வாயிலுக்கு வந்துள்ளார்.
.
மேலும், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் நான்கு இளைஞர்கள் இன்று காலை 07.20 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-101 இல் மாலைதீவுக்கு மாலே சென்று அங்கிருந்து ஜேர்மனிக்கு தப்பிச்செல்வதற்காக வந்துள்ளனர்.
இதன்போது கடைசி நேரத்தில் வழங்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்த குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் அவர்களிடம் இருந்த கடவுச்சீட்டுகள் மற்றும் விமான டிக்கெட்டுகள் போலியானவை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லை அமலாக்கப் பிரிவின் அதிகாரிகள் இந்த இளைஞர்களைக் கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.