கிழக்கை வந்தடைந்த இந்திய ஏவுகணைக் கப்பல்..! கூட்டாண்மை பயிற்சிக்கு திட்டம்
31 Jul,2023
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குக்ரி வகை கொர்வெட் ஏவுகணையை தாங்கிய இந்தியக் கடற்படைக் கப்பலான 'கஞ்சர்', திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
குறித்த கப்பல் எதிர்வரும் 31ம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்கும் என இந்திய உயர்ஸ்தானிகரகாலயம் தெரிவித்துள்ளது.
இந்த பயணத்தின்போது இந்திய கடற்படைக் கட்டளை அதிகாரியான கொமாண்டர் என் வி எஸ் பானி குமார், கிழக்கு கடற்படைத் தளபதியை சந்திக்கவுள்ளார். கொர்வெட் ஏவுகணையுடன் திருகோணமலையை வந்தடைந்துள்ளது
இதன்போது, ஏவுகணை செயற்பாடுகள் குறித்தும் பல்வேறு தொழில்முறை தொடர்புகள் குறித்தும் கலந்துரையாடப்படவுள்ளன.
அத்துடன், நாளை (31) கடல்சார் கூட்டாண்மை பயிற்சியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், இந்திய கடற்படையின் திறன்களை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையின் திறன்களை அதிகரிப்பதற்காக இரு நாடுகளுக்கிடையிலான இடையிலான ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு இந்திய கடற்படை கப்பலான கஞ்சரின் விஜயம் அமையவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.