திருப்பதி ஏழுமலையான் கோயில் இலங்கையில்..! இந்தியாவின் உறுதிமொழி
05 Jul,2023
இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோயில் அமைக்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன்நடைபெற்ற சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை செந்தில் தொண்டமான் சந்தித்து சில ஆலோசனைகள் மேற்கொண்டுள்ளார்.
அதில் கிழக்கு மாகாணம் - ஆந்திரா இடையேயான நட்புறவு, கரும்பு - மிளகாய் விவசாயம், மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.
அதேசமயத்தில், BOI ஆடைகள் பூங்கா குறித்தும் , திருகோணமலை துறைமுகத்தில் தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் வயது மூப்பு காரணமாக திருப்பதிக்கு பயணம் செய்ய முடியாமல் இருக்கிறார்கள்.
அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைக்கவும் கோரிக்கை ஆளுநர் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
இக்கோரிக்கைக்கு சாதகமான பதிலை ஆந்திர முதலமைச்சர் வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பில் ஆந்திர முதலமைச்சர் அவர்களால் திருப்பதி பெருமாள் சுவாமி சிலை செந்தில் தொண்டமானுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய துணை தூதர் டாக்டர். வெங்கடேஷ் மற்றும் இலங்கையின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்றனர்.