இலங்கையில் மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானம்
01 Jul,2023
இலங்கையில் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மின்சார கட்டணங்களை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, வீட்டு பாவனைக்கான மின்சார கட்டணம் 0 முதல் 30 வரையான அலகுகளுக்கு உட்பட்ட பிரிவுக்கு, 65 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அலகொன்றுக்கான கட்டணம், 30 ரூபாவிலிருந்து 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாதாந்த நிலையான கட்டணத்தை, 400 ரூபாவிலிருந்து 150 ரூபா வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.