இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே உயிருக்கு குறி... அலெர்ட் செய்த உளவுதுறை
26 Jun,2023
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேஇலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச நிதி ஒப்பந்த மாநாட்டில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே கலந்துகொண்டார். இந்தப் பயணத்தை முடித்துவிட்டு இன்று தாயகம் திரும்ப உள்ளார்.
இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கேவை குறிவைத்து தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிநவீன துப்பாக்கி மூலமோ, வேறு வடிவிலோ தாக்குதல் நடத்தப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விக்ரமசிங்கே செல்லும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என அந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் ஆலேஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், போலீசாருக்கு அனுப்பப்பட்ட ரகசிய தகவலை ஊடகத்திற்கு பகிரப்பட்டது எப்படி என விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 இல் இலங்கை வரலாறு கானாத பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அந்நாட்டு மக்கள் அதிபர் கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து நடத்திய போராட்டத்தின் விளைவாக ராஜபக்ச குடும்பத்தினர் நாட்டை விட்டு தப்பியோடினர்.
..
இதைத் தொடர்ந்து பல தரப்பின் ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்க ஆட்சி பொறுப்பை ஏற்று அதிபரானார். கடனை அடைத்து பொருளாதாரத்தை சீராக்க பல்வேறு குழுக்களை அமைத்து அவசர கால செயல் திட்டங்களை அமல்படுத்தி கிளர்ச்சியை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளார் ரணில்.