இலங்கை சென்ற விமானங்கள் - தரையிறங்க முடியாத நிலைமத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி
08 Apr,2023
குவைட்டில் இருந்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை தரையிறங்கவிருந்த விமானம் சீரற்ற காலநிலையால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலிருந்து திருப்பி அனுப்பப்பட்டது.
இன்று -08- பெய்த கனமழை பார்வைத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், சில விமானங்களும் தாமதமாகின.
குவைட்டில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் UL 230D விமானம் இன்று காலை மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதாக BIA தெரிவித்துள்ளது.