400 சுற்றுலா பயணிகளுடன் மத்தளவில் தரையிறங்கியது விமானம்
30 Dec,2022
சுமார் நானூறு பயணிகளை ஏற்றிக்கொண்டு "ரெட் விங்ஸ்" விமான நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 777 விமானம் இன்று வியாழக்கிழமை (டிசம்பர் 29) மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.
23 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம் இலங்கைக்கு வருவது இதுவே முதல் முறையாகும்.
இதன்படி, மொஸ்கோவில் இருந்து மத்தளவிற்கு வாரத்திற்கு இரண்டு முறை விமான சேவைகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.