கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி தோட்டாவால் பரபரப்பு
25 Dec,2022
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பயணிகள் செல்லும் பகுதிகளிலுள்ள ஆண்கள் மலசலகூடத்திலிருந்து இந்த துப்பாக்கி தோட்டா கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பரவு செய்யும் ஊழியர் ஒருவர் இந்த தோட்டாவை முதலில் அவதானித்துள்ள நிலையில், அதனை, விமான நிலையபொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கி தோட்டா எவ்வாறு விமான நிலையத்திற்குள் கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பிலான விசாரணைகளை விமான நிலைய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.