வெளிநாட்டவர் இலங்கையரை விரும்பியபோது திருமணம் செய்யலாம்!!
03 Nov,2022
வெளிநாடடவர்கள் இலங்கையரை திருமணம் செய்ய வேண்டுமாயில் தங்களது நாட்டில் எந்தவிதமான குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை என பாதுகாப்பு அதிகாரிகளிடம் இருந்து நற்சாண்றுதலை பெற்று சான்றுதலை ஆறு மாதத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின் பதிவாளர் நாயகம் திருமணப் பதிவுச் சாண்றிதலை வழங்கும் நிகழ்வு நடைமுறையில் இருந்தது.
இன்றிலிருந்து இக்கட்டுப்பாடுகளை விசேட வர்த்தமாணி மூலமாக உடணடியாக நீக்குமாறு பிரதமர் தினேஸ் குணவர்த்தன உரிய தரப்பினர்களுக்கு அறிவித்துள்ளார். தொடரந்து தெரிவித்த அவர் இது ஒரு மனிதவுரிமை மீறல் எனவும், சுதந்திரமான முறையில் யார் வேனுமானாலும் விரும்பியவரை திருமணம் செய்யலாம் என தெரிவித்தார்