சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்ட அப்பாவி பொது மக்கள்..! கொழும்பில்
21 Oct,2022
முல்லேரியா மற்றும் அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் காரணமல்லாமல் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய குற்றச்சாட்டில் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் குறித்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
எனினும் துப்பாக்கிசூட்டில் கொல்லப்பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல என காவல்துறை விசாரணைக் குழுக்கள் வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலக ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் இவ்வாறான தவறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலைகள் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பும் நோக்கிலேயே காவல்துறை விசேட அதிரடிப் படையினரால் இவ்வாறான தவறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக பாதாள உலக ஒழிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை விசாரணைக் குழுக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.