11 மாடுகளை பறித்த மின்னல்! ஓழந்தையில் சோக சம்பவம்
13 Oct,2022
வவுனியா பகுதியில் உள்ள பகுதியொன்றில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு பகுதியில் மாலை நேரம்மாடுகள் மேய்ச்சலில் ஈடுபடுக்கொண்டிருந்த போது மழை பெய்த்துள்ளது.
இதன்போது, மாடுகள் மோய்சலில் ஈடுபட்ட பகுதியில் உள்ள மரத்தின் மீது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு மாடுகளை தாக்கியமையால் 11 மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளன.
இதேவேளை, வவுனியாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில் கடந்த 7-ம் திகதி இடி, மின்னல் தாக்கத்தினால் மாமடு பகுதியில் குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.