நான்கு மாதங்களின் பின் இலங்கையில் தரையிறங்கிய ரஷ்ய விமானம்!
10 Oct,2022
ரஷ்ய விமான சேவைக்கு சொந்தமான ஏரோப்ளோட் விமானம் இன்று (10) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
04 மாதங்களுக்குப் பிறகே ஏரோப்ளோட் விமானம் மொஸ்கோவிற்கும் கொழும்புக்கும் இடையிலான சேவையை தொடங்கியுள்ளது.
அதேவேளை, ஏரோப்ளோட் விமான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளமையினால், இலங்கைக்கு ரஷ்ய சுற்றுப்பயணிகளின் வருகை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.