கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர் - கொக்கேய்ன் மாத்திரை மாத்திரை அதிர்ச்சி
29 Sep,2022
வயிற்றில் பல கொக்கேய்ன் மாத்திரைகளை மறைத்து வைத்திருந்த வெளிநாட்டு பிரஜை ஒருவரை கட்டுநாயக்க சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
43 வயதான உகண்டா நாட்டு பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் உகண்டாவிலிருந்து கட்டார் ஊடாக இந்த நாட்டுக்கு வந்துள்ளார்.
சந்தேகநபரின் வயிற்றை பரிசோதனை செய்த போது கொக்கெய்ன் அடங்கிய 17 மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கொக்கேய்னின் சந்தை பெறுமதி சுமார் 12 மில்லியன் ரூபா என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளினாகொக்கேய்ன் மாத்திரை சந்தேகநபர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.