தாமரைக் கோபுர கடன் அடைப்பு - நாளாந்தம் 41 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் தேவை
25 Sep,2022
தாமரைக் கோபுர கடன்
தாமரைக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக இலங்கை பெற்ற கடனை முழுமையாக செலுத்த வேண்டுமாயின் அதன் மூலம் நாளாந்தம் 41 ஆயிரம் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி ரணவக்க, கோபுரத்திற்காக மொத்தமாக 105 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தாமரைக் கோபுரம் கட்டப்பட்ட நிலத்தில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு வழங்குவதற்காக 4.5 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அவர்களை குடிமயர்த்துவதற்கு மேலதிகமாக மேலும் 56 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனவும் அதற்கு ஐந்தாண்டுகளில் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இருண்ட படத்தை மாத்திரமே சித்தரிக்கும் ஒன்றாக தற்போது தாமரைக் கோபுரம் உள்ளதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.