மூலப்பொருள் பற்றாக்குறை – சுமார் 10 ஆயிரம் ஹோட்டல்களுக்கு பூட்டு
13 Sep,2022
ரொட்டி மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் பற்றாக்குறையால் சுமார் 10,000 ஹோட்டல்கள் முற்றாக மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இந்த பற்றாக்குறையால் அரசு நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் உள்ள சிற்றுண்டிச்சாலைகளில் பாதியளவு மூடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரொட்டி மாவு, முட்டை, இறைச்சி மற்றும் மீன் தட்டுப்பாடு காரணமாக பல்வேறு நிகழ்வுகளுக்கான கேட்டரிங் சேவைகளும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.