நாட்டை சீரழித்தவர்களுக்கு அமைச்சர் பதவி பைத்தியக்காரத்தனம் – அலவத்துவல
12 Sep,2022
இந்த நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு கொண்டுசென்றவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல இதனைத் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து மக்கள் எதிர்பார்த்த எந்த நிவாரணமும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அலவத்துவல குற்றம் சாட்டினார்.
பிள்ளைகளுக்கு ஒரு வேளை கூட உணவளிக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இன்று அநாதரவாக இருப்பதாகவும் ஜே.சி அலவத்துவல தெரிவித்தார்.
இந்த நாட்டை சீரழித்தவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது பைத்தியக்காரத்தனம் எனவும் ஜே.சி அலவத்துவல தெரிவித்தார்.