கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு
05 Sep,2022
கோட்டாபயவே தீர்மானிக்க வேண்டும்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளாரா இல்லையா என்பதை அவர் தான் தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
"அவர் அதைப்பற்றி முடிவெடுக்க வேண்டும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். மற்றவர்களுக்காக நாம் முடிவெடுக்க முடியாது. முதலில் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும், பிறகு என்ன செய்வது என்று நிர்வாக சபை முடிவு செய்யலாம்."என்றார்.
அனைத்து உரிமைகளும் உள்ளது
முன்னாள் அதிபர் தனது முடிவை அறிவித்தவுடன் கட்சியின் நிர்வாக சபைக்கு அறிவிப்போம். அவருக்கு இலங்கையில் வசிக்கவும், அரசியலில் ஈடுபடவும் அனைத்து உரிமைகளும் இருக்கின்றது என்று மேலும் கூறினார்.
தாய்லாந்தில் தங்கியிருந்த கோட்டாபய நேற்றையதினம் நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.