இலங்கையில் இருந்து புறப்பட்டது சீன கப்பல்
24 Aug,2022
சீனாவின், 'யுவான் வாங் 5' உளவுக்கப்பலை ஆக., 11 - 17 வரை இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி வைக்க சீனா திட்டமிட்டது. செயற்கைக்கோள் மற்றும் 'பாலிஸ்டிக்' ஏவுகணைகள் போன்ற தொழில்நுட்பங்கள் உள்ள இந்த கப்பல், நம் ராணுவ தளங்கள் மற்றும் கட்டமைப்புகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் அபாயம் இருந்ததால், இதை அம்பன்தோட்டாவில் நிறுத்திவைக்க இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து உளவுக்கப்பலுக்கு இலங்கை அனுமதி மறுத்தது.சீன அரசு அழுத்தம் கொடுத்ததை அடுத்து, ஆக., 16 - 22 வரை கப்பலை நிறுத்தி வைக்க இலங்கை ஒப்புக்கொண்டது. கடந்த 16ல் அம்பன்தோட்டா துறைமுகம் வந்த கப்பல், இலங்கை நேரப்படி நேற்று மாலை 4:00 மணிக்கு சீனா புறப்பட்டு சென்றது. இலங்கையில் இருந்து புறப்பட்ட உளவுக்கப்பல், சீனாவின் ஜியாங் இன் துறைமுகம் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.