நாட்டை விட்டுத் தப்பிக்க முயன்ற 10 பேர் தலைமன்னாரில் கைது!
18 Aug,2022
நாட்டிலிருந்து சட்டவிரோதமாக குடியேறமுயற்சித்த 10 பேர் தலைமன்னாரில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் நேற்று இரவு இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த பத்து பேரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகத்துக்கு இடமானமுறையில் பயணித்த டிங்கி படகு ஒன்று இலங்கைக்கு சொந்தமான பி175 கரையோர ரோந்துக் கப்பலினால் சுற்றிவளைக்கப்பட்டது.
அதன் போது, அந்த டிங்கி படகில், 18 வயதுக்கு மேற்பட்ட நான்கு (04) ஆண்கள், இரண்டு பெண்கள் (02) மற்றும் 18 வயதுக்கு குறைவான நால்வரும் டிங்கி படகுகளை இயக்கிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை, உறுமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.