சிங்கப்பூரை விட்டு வெளியேறினார் கோட்டா!
12 Aug,2022
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்று சிங்கப்பூரிலிருந்து வெளியேறியுள்ளதாக ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷ, இன்று சிங்கப்பூரை விட்டு வெளியேறியதை சிங்கப்பூரின் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கோட்டாபய ராஜபக்ஷவின் குறுகிய கால பயண அனுமதி இன்று காலாவதியாக இருந்தது. ஜூலை 14 ஆம் திகதி சிங்கப்பூர் வந்தபோது அவருக்கு முதலில் 14 நாள் பயண அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் இது ஆகஸ்ட் 11 வரை மேலும் 14 நாட்கள் நீடிக்கப்பட்டது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட பெரும் போராட்டங்களுக்கு மத்தியில் இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய ராஜபக்ஷ, இ்ன்று தாய்லாந்து சென்றடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது