தவறான பிரசாரத்தை மறுக்கிறது ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்
06 Aug,2022
உணவு வழங்குவதில்லை
தனது வணிக பிரிவில் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்குவதில்லை என்ற தவறான பிரசாரத்தை நிராகரிப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
விமானத்தின் வணிக வகுப்புப் பயணிகளுக்கு நான்கு முக்கிய உணவுகளில் இருந்து விருப்பமான உணவைத் தேர்வுசெய்ய வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதுமான உணவுகள் விமானத்தில் வைக்கப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவுத் தெரிவுகள்
பயணிகளுக்கு எப்போதும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உணவுத் தெரிவுகள் இருப்பதாகக் கூறும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், ஒரு வேளை உணவு தீர்ந்துவிட்டால், மீதமுள்ள உணவுகளில் ஒன்றைத் தெரிவு செய்யும் வாய்ப்பைப் பயணிகள் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.