பல்டி அடிக்கப் போகும் எம்.பிக்கள்! விபரங்களை கசிய விட்டார் அமைச்சர் ரணிலுக்கே வெற்றி
20 Jul,2022
ஐக்கிய மக்கள் சக்தியின் பல உறுப்பினர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டளஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்கத் தீர்மானித்துள்ள போதிலும், அவர்கள் பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கே வாக்களிப்பார்கள் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், இது ஒரு இரகசிய வாக்கெடுப்பு எனவும் கூறியுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,
ரணிலுக்கே வெற்றி
“ அதிபர் தேர்தலுக்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க வெற்றியீட்டுவார். வெற்றி பெற்றதன் பின்னர் அவர் சர்வகட்சி ஆட்சியை அமைப்பார் எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ரணிலை எதிர்த்து, பொதுஜன பெரமுன உட்பட பல கட்சிகள் டளஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.