விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்
09 Jul,2022
ஊரடங்கு அனுமதிப் பத்திரம்
நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் விமான நிலையம் செல்லும் பயணிகள் மற்றும் நாட்டிற்கு வரும் பயணிகள் பல்வேறு சிரமங்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர் நோக்கியுள்ளனர்.
ஊரடங்கு நடைமுறையில் உள்ள பகுதிகளால் விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் தமது விமான பற்றுச்சிட்டுகளை ஊரடங்கு அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரம் அடைந்த போராட்டக் களம்
விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல் | Notice To
கோட்டாபய அரசை பதவி விலகுமாறு கோரி நாடாத்தப்பட்டு வரும் போராட்டம் தீவிரம் அடைந்த காரணத்தால் கொழும்பின் பல பகுதிகளுக்கு நேற்று இரவு 9 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் படி , நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.