இலங்கையில் இருந்து விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியில் வெளியீடு
05 Jul,2022
இந்த பட்டியலில் இலங்கைக்கு 83 ஆவது இடம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு நாட்டின் கடவுச்சீட்டும் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்ற பட்டியல் ஒவ்வொரு வருடமும் வெளியிடப்படுகிறது. விசா பெறாமல் வேறு நாட்டிற்கு பயணிக்கும் கடவுச்சீட்டின் திறனைப் பொறுத்து இந்த தரவரிசை மாறுபடும்.
அதற்கமைய, இந்த பட்டியலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்னிலையில் உள்ளது.
அந்த கடவுச்சீட்டை வைத்திருப்பவர் விசா இல்லாமல் 115 நாடுகளுக்குள் நுழைய முடியும்.
நுழையும் போது விசா பெறக்கூடிய நாடுகளின் எண்ணிக்கை (Visa On Arrival) 55 ஆகும். 28 நாடுகளுக்கு மட்டுமே முன் விசா தேவையாக உள்ளதென குறிப்பிடப்படுகின்றது.
இலங்கை கடவுச்சீட்டுடன் விசா இன்றி 12 நாடுகளுக்கு நுழைய முடியும்
இலங்கையில் இருந்து விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியில் வெளியீடு | Rank Is Sri Lanka Passport
இந்த தரவரிசையில் இலங்கைக்கு 83வது இடம் கிடைத்துள்ளது. 12 நாடுகளுக்கு விசா இன்றி இலங்கை கடவுச்சீட்டுடன் நுழைய முடியும். Visa On Arrival விசாவின் மூலம் 37 நாடுகளுக்குச் செல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகின்றது.
147 நாடுகளுக்கு முன்கூட்டியே விசா
இலங்கையில் இருந்து விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகளின் பட்டியில் வெளியீடு | Rank Is Sri Lanka Passport
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர் உலகெங்கிலும் உள்ள 147 நாடுகளுக்குள் நுழைவதற்கு முன்கூட்டியே விசாவைப் பெற வேண்டும்.
இதேவேளை, The Henley Passport Index Q2 2022 உலகளாவிய தரவரிசையின் படி, இலங்கை 103வது இடம் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.