கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு பெறுவதற்கான வரைபடத்தை தயாரிக்குமாறு மின் மற்றும் எரிசக்தி அமைச்சக அதிகாரிகளுக்கு கோபா குழு அறிவுறுத்தியுள்ளது.
நாட்டில் தேவையான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொண்டு இதற்கான விரிவான வரைபடத்தை தயாரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் திட்டமிடப்பட்டுள்ள இயற்கை எரிவாயு அகழ்வுத் திட்டங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளித்த அமைச்சின் அதிகாரிகள், இந்த அகழ்வு நடவடிக்கைகளுக்கு பல்வேறு தடைகள் இருப்பதாக சுட்டிக்காட்டினர்.
இந்த அகழ்வுப் பணிகளுக்கு வெளிநாட்டு ஆலோசனைகள் தேவையா என்பது குறித்தும், சம்பந்தப்பட்ட தரப்பினர் குறித்தும் இந்த கூட்டத்திற்கு வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டறிந்தனர்.
அகழ்வாராய்ச்சிக்கு மற்ற நாடுகளின் ஆலோசனைகள் தேவையில்லை என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அப்படியானால், அகழாய்வுகளை விரைவில் முடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் நலன் கருதி, இந்த அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான வரைபடத்தை விரைவில் தயாரிக்க வேண்டும் என்றும் கோபா குழு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த தேர்தல் காலங்களில் ராஜபக்ச குடும்பத்தினர் வழங்கிய பொய் வாக்குறுதிகளால் தான் நாடு இன்றுமிக மோசமானபொருளாதாரநெருக்கடிகளைச் சந்தித்துள்ளது.
நானும் அவர்கள் போல் பொய் வாக்குறுதிகளை வழங்கி ‘படுமுட்டாள்’ என்ற பெயரைக் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு ராஜபக்ச குடும்பத்தினர் வழங்கிய பொய் வாக்குறுதிகளை நம்பித்தான் அவர்களின் கட்சிக்குப் பெரும்பாலான மக்கள் வாக்களித்து அவர்களை ஆட்சிப்பீடம் ஏற்றினார்கள்.
ஆனால், இறுதியில் நடந்தது என்ன? எல்லாம் தலைகீழாக மாறியுள்ளது.
ஆணையை வழங்கியமக்களே ராஜபக்ச குடும்ப ஆட்சிவேண்டாம் என்று போராட்டத்தைஆரம்பித்தார்கள்.
நானும் ராஜபக்ச குடும்பத்தினர் போல் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கத் தயாரில்லை.
தற்போதைய பாரிய பொருளாதார நெருக்கடிக்கு இவ்வருடத்துக்குள் தீர்வு கிடைக்கும் என்று கனவிலும் நினைக்கவே கூடாது. பொருளாதார நெருக்கடி நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுக்க ஒன்றரை வருடங்களாவது தேவை.
அதேவேளை, சர்வதேசமும் தொடர்ந்து உதவிகளை வழங்கினால்தான் குறித்த காலப்பகுதிக்குள் நாட்டை மீட்டெடுக்க முடியும்.
எனது கருத்துக்களை எடுத்துக்காட்டி எதிரணியினர் அரசியல் நடத்துகின்றனர். பிரச்சினைகளையும், இயலாமைமையும் கூறும் பிரதமர் எதற்கு என்று அவர்கள் பிரசாரம் செய்கின்றனர்.
இது அவர்களின் சிறுபிள்ளைத்தன அரசியலைக் காட்டுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்