ராஜபக்ஷர்கள் கோடிக்கணக்கான பணம் பதுக்கப்பட்டுள்ளது
27 Jun,2022
ராஜபக்ச குடும்பத்தின் சொத்துகள் சீசெல்ஸ் போன்ற வரி சலுகை வழங்கப்படும் நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அனுரகுமார இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
அமெரிக்காவிலுள்ள வங்கியொன்றின் பிணைமுறிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அவை ஜூலை 18ஆம் திகதி காலாவதியாகவுள்ளன.
இவ்வாறிருக்க அரசாங்கம் கடனை மீள செலுத்த முடியாது என அறிவித்துள்ளது. இதன் காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக அமெரிக்க ரிசேர்வ் வங்கி வழக்கு தாக்கல் செய்துள்ளது.
ராஜபக்ச குடும்பம் மக்களின் சொத்துகளை கொள்ளையடித்துள்ளதாக அந்த வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளத. அவை சீசெல்ஸ் போன்ற வரி சலுகை வழங்கப்படும் நாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கானது, 'ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நரகங்களின் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலை விட மோசமானது' என்று பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர். இன்று முழு நாடும், பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளது. எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளனர்.
இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையற்ற நிலைமையை தோற்றுவித்துள்ளனர். விவசாயிகள், மீனவர்கள், அரச சேவைகள் என அனைத்தும் முடங்கியுள்ளன. இடைக்கிடை பாடசாலைகளை மூடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது என்ன நாடு? இதனை நாம் மாற்ற வேண்டாமா? ஆட்சியாளர்கள் இதற்கு பொறுப்புகூற வேண்டாமா? இது இயற்கையாக தோற்றம் பெற்ற அழிவு அல்ல என குறிப்பிட்டுள்ளார்.