நாட்டு மக்களிடம் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ள பாராளுமன்றத்தில் பொய் கூறிய ரணில்?
23 Jun,2022
இந்திய உயர் அரச அதிகாரிகள் மூவர் நாளை இலங்கையை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்கால கடன் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவர்கள் வருகை தரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நிகழ்த்திய விஷேட உரையின் போது இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் திங்கட்கிழமை, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான குழு இலங்கை வந்தடைந்ததுடன், குழுவுடனான பேச்சுவார்த்தை அடுத்த சில நாட்களுக்கு தொடரும்.
எங்கள் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளில் உதவ நிதி மற்றும் சட்ட ஆலோசனை நிறுவனங்களான Lazard மற்றும் Clifford Chance இன் பிரதிநிதிகள் இப்போது இலங்கையில் உள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை, அமெரிக்க திறைசேரி திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவும் இலங்கை வரவுள்ளது.
ஜூலை மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் உத்தியோகபூர்வ அளவிலான ஒப்பந்தத்தில் ஈடுபட உள்ளோம்.
இங்கு மிக முக்கியமானது நமது கடன் மறுசீரமைப்புத் திட்டம். Lazard மற்றும் Clifford Chance இன் பிரதிநிதிகளுடன் சேர்ந்து ஜூலை மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்திற்கான கட்டமைப்பை முடிக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.