இலங்கைக்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர்
17 Jun,2022
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கும், 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடன் தொகையாக வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கையின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை ஆதரிக்க இந்த கடனை அமெரிக்கா வழங்கும் என கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.