ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் தனியார் மயமாக்கல்
30 May,2022
இலங்கை அரசாங்கத்திற்கு சொந்தமான அதிக நட்டத்தை ஏற்படுத்தும் நான்கு நிறுவனங்களில் ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனமும் ஒன்றாகும் என சுதந்திரமாக மதிப்பிடும் அமைப்பான அட்வகேற்றா (Advocata) தெரிவித்துள்ளது.
இதன் செயல்பாடு காரணமாக பொது நிதி வீணாக விரையமாவதாக அந்த அமைப்பின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் மயமாக்கல்
இந்த நிலையில், இந்த நிறுவனத்தினை தனியார் மயப்படுத்துவதன் மூலம் மேலும் ஏற்படக்கூடிய நட்டத்தினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர முடியும் என அந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, கடந்த 2021 ஜூலை வரையிலான காலப்பகுதியினில் சுமார் 372 பில்லியன் ரூபா நட்டம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நட்டத்தில் இருந்து மீள்வதற்கு பல பரிந்துரைகள் அட்வகேற்றா அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.