இலங்கையில் யூரோவின் பெறுமதி மீண்டும் அதிகரிப்பு
28 May,2022
இலங்கையில் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்துள்ள நிலையில், ரூபாவின் பெறுமதியும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வாரமாக அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றும் நிலையாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 13ஆம் திகதி முதல் அமெரிக்க டொலரின் பெறுமதி நிலையானதாக பேணப்பட்டு வருவதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கு அமைய அமெரிக்க டொலரின் கொள்வனவுவிலை 364. 22. ரூபாவாகவும், விற்பனை விலை 364 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
யூரோ ஒன்றின் விற்பனை விலை 392 ரூபாவாகவும் கொள்வனவு விலை 381 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 462 ரூபாவாகவும் கொள்வனவு விலை 446 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 382 ரூபாவாகவும் கொள்வனவு விலை 368 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 287 ரூபாவாகவும் கொள்வனவு விலை 276 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது.