பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு மயக்க மருந்துகள் அன்பளிப்பு
28 May,2022
நாட்டில் பற்றாக்குறையாகவுள்ள மயக்க மருந்துகளில் ஒரு தொகை, பிரான்ஸ் அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த மருந்துகள் மூன்று மாதங்களுக்கு போதுமானவை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற போதிலும், நோயாளர் பராமரிப்பு சேவைகள் சிக்கலின்றி முகாமைத்துவம் செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, வைத்தியசாலையில் தற்போது பற்றாக்குறையாகவுள்ள மருந்துகளை விரைவாக விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுடன் இது குறித்து கலந்துரையாடியுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் கூறினார்.
இதேவேளை, வைத்தியசாலையில் பற்றாக்குறையாக உள்ள மருந்துகள் தொடர்பான அறிக்கை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.