பதவியில் இருந்து விலகுகிறார் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!
27 May,2022
இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் பதவியில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்.
இதையடுத்து, தற்போதைய இராணுவ தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே எதிர்வரும் 1 ஆம் திகதி முதல் புதிய இராணுவத் தளபதியாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் ஜெனரல் ஷவேந்திர சில்வா பாதுகாப்பு படை தளபதிகளின் பிரதானியாக கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தற்போது பாதுகாப்பு படைகளின் பதில் பதவிநிலை பிரதானியாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.