தலைமறைவாகியிருந்த மகிந்த இன்று நாடாளுமன்றம் சென்றார்! சூடு பிடிக்கும்
18 May,2022
சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார்.
தற்போதைய நாடாளுமன்ற அமர்வுகளில் அவர் கலந்து கொண்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறைகளை அடுத்து முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகியிருந்தார்.
தலைமறைவாகியிருந்த மகிந்த இன்று நாடாளுமன்றம் சென்றார்! சூடு பிடிக்கும் நாடாளுமன்ற விவாதங்கள்
அதனைத் தொடர்ந்து புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் நேற்றைய தினம் மீ்ண்டும் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. எனினும் நேற்றைய தினம் அவர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொண்டிருக்கவில்லை.
இந்தநிலையில் இன்று மகிந்த நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.