கோட்டா கோ கம தொடர்பில் பிரதமர் வெளியிட்ட உத்தரவு
15 May,2022
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாளையதினம் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச தலைவர் செயலகத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள கோட்டா கோ கம எதிர்ப்பு தளத்தை பராமரிப்பதற்கும் குழுவொன்றை பிரதமர் நியமித்துள்ளார்.
கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, ருவான் விஜேவர்தன மற்றும் சுகாதார அமைச்சு, சிறிலங்கா இராணுவம் மற்றும் காவல்துறை பிரதிநிதிகள் அடங்கிய பிரிவிற்கு கோட்டா கோ கம வளாகத்திற்கு தேவையான வசதிகளை வழங்குவது குறித்து ஆராயுமாறு பணித்துள்ளதாக அவர் கூறினார்.
போராட்டம் நடத்தும் இளைஞர்கள் முன்வைக்கும் நிபந்தனைகளின் அடிப்படையில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், போராட்டத் தளங்கள் மீது ஒடுக்குமுறை முயற்சிகள் நடைபெறாது என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
மகா சங்கத்தினரின் திட்டத்தின் படி கோட்டாபய ராஜபக்ச மகிந்த ராஜபக்சவை குறிவைத்து அவரை உடனடியாக பதவி விலகுமாறு தெரிவித்துள்ளதாக பிரித்தானிய வரலாற்று ஆய்வாளர் மயூரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மகா சங்கத்தினரின் திட்டத்திற்கமைய உடனடியாக மகிந்த ராஜபக்சவை கோட்டாபய ராஜபக்ச வரவழைத்து குடும்பத்தினருடன் கலந்துரையாடி பிரதமர் பதவியிலிருந்து விலகுமாறு அறிவித்த காரணத்தினால் கோபமடைந்த மகிந்த உடனடியாக பதவி விலகி தனது கோபத்தை குண்டர்களை வைத்து வன்முறையாக மாற்றி தீர்த்துக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
நாமல் ராஜபக்சவின் இருப்பை தக்கவைக்க,அவரின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடும் என்ற கவலையில் மகிந்த இவ்வாறு செயற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.