டொலர் இல்லை - கடலில் தவம் கிடக்கும் எரிபொருள் கப்பல்
14 May,2022
எரிசக்தி அமைச்சினால் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் தாங்கிக்கு அரசாங்கம் பணம் செலுத்தத் தவறியமையினால் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக குறித்த கப்பல் கடலில் தவம் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கப்பலை விடுவித்தால் எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினை ஓரளவுக்கு தணியும் எனவும் அதனை விடுவிப்பதற்கான டொலர்களை திரட்டும் நடவடிக்கையில் தற்போது அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்ற நிலையில் இன்றையதினம் டொலரின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளதாக மத்தியவங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.