யுத்தத்தை முடித்தது கருணாவும் ரணிலுமே ராஜபக்சர்கள் ஏமாற்றுகிறார்கள்!!
28 Apr,2022
தாமே யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்ததாக சிங்கள மக்களை ராஜபக்சர்கள் ஏமாற்றி வருகிறார்கள் என யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு காலிமுகத்திடலில் 20ஆவது நாளாகவும் இன்றைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இதில் கலந்து கொண்ட போதே குறித்த நபர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2009ஆம் ஆண்டு யுத்தத்தை முடித்தவர்கள் ரணிலும், கருணாவுமே, தாமே யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்ததாக சிங்கள மக்களை ராஜபக்சர்கள் ஏமாற்றி வருகிறார்கள்.
நான் இருப்பது ஹப்புத்தளையில்.யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து ஹப்புத்தளைக்கு வந்துவிட்டேன். முடிந்தால் வரச்சொல்லுங்கள்.
எனக்கு பயமில்லை. யுத்தத்தை முடித்தவர்கள் ரணிலும், கருணாவுமே.
விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கம் எங்கே? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.