இலங்கை பயணத்துக்கான விமான பதிவுகளை இரத்து செய்த வெளிநாட்டவர்
06 Apr,2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக நாளாந்தம் வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 4000லிருந்து 2500 ஆக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதுவும் நாட்டின் டொலர் பிரச்சனையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரத்தில் இருந்து இந்த சரிவு ஏற்பட்டுள்ளது. இலங்கைக்கான விமானங்களுக்கான ஆசனங்களை முன்பதிவு செய்தவர்களும் அவற்றை இரத்து செய்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இரத்து செய்யப்பட்டவற்றில் ஐரோப்பிய நாடுகள் மட்டுமன்றி இந்தியாவும் அடங்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000 ஐத் தாண்டியுள்ளதுடன், மார்ச் மாதத்தில் மட்டும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,600 ஆக அதிகரித்துள்ளது. இந்த குழுவில் இருந்து நாடு $503 மில்லியன் சம்பாதித்துள்ளது