ரஷ்யா தொடர்பில் சிறிலங்கன் எயார் லைன்ஸ் எடுத்துள்ள தீர்மானம்
28 Mar,2022
ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான அனைத்து விமான சேவைகளையும் எதிர்வரும் 26ஆம் திகதி இரவு முதல் இடைநிறுத்த ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் புதிய தலைமை வர்த்தக அதிகாரியாக பிரித்தானியாவைச் சேர்ந்த ரிச்சர்ட் நட்டில் என்பவர் உள்ள நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
கடந்த பருவத்தில் இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமாக ரஷ்யா விளங்கியது. நட்டிலின் இந்த முடிவு ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு மாத்திரமன்றி சுற்றுலாத்துறையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சில செய்திகளின்படி, ரஷ்ய-உக்ரைன் போருக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் விமானத்தை இடைநிறுத்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நட்டில் பிரித்தானிய பிரஜை எனவும், பிரித்தானிய அரசாங்கம் உக்ரைனுக்கு தனது ஆதரவை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.