உலக குழுவினர்களிற்கிடையே மோதல்!!: துப்பாக்கிச்சூடு – இருவர் உயிரிழப்பு
26 Mar,2022
கடவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதாள உலக உறுப்பினரான “பேரல் சங்க”வின் உதவியாளர்கள் இருவர் இதன்போது கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு – கண்டி வீதியில் கடவத்தை 9ஆம் தூண் பகுதியில் நேற்று (24) இரவு குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் மீது துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் கிரிபத்கொடை வைத்தியசாலை மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் பேலியகொட பகுதியைச் சேர்ந்த 30 மற்றும் 31 வயதுடைய கசுன் சிந்தக மற்றும் கெலும் சமீர என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த இருவரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின் உறுப்பினரான பேரல் சங்கவின் கூட்டாளிகள் என்றும், அவர்கள் மீது பல கொலைகள் மற்றும் குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் கிட்டத்தட்ட 20 T-56 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமும் சேதப்படுத்தப்பட்டது.