டொலர் தட்டுப்பாடு – வெளிநாட்டில் உள்ள மூன்று தூதரகங்கள் மூடல் !!
21 Mar,2022
இலங்கையின் பல தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் தற்காலிக நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், ஒரு வருடத்திற்குள் இராஜதந்திர அலுவலகங்களை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
டொலர் தட்டுப்பாடு காரணமாக பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகம், ஒஸ்லோவில் உள்ள தூதரகம் மற்றும் சிட்னியில் உள்ள தூதரகம் என்பன மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார நிலை மற்றும் நிதி ஆதாரங்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்திகளின் அடிப்படையில் சரியான நேரத்தில் தீர்மானங்கள் எட்டப்பட வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.